பாகிஸ்தான் ரயில் நிலைய தற்கொலைப் படை தாக்குதலில் பலி 26 ஆக அதிகரிப்பு; 62 பேர் காயம்

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில், 16 ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 62 பேர் காயமடைந்தனர்.

Nov 11, 2024 - 15:45
 0  7
பாகிஸ்தான் ரயில் நிலைய தற்கொலைப் படை தாக்குதலில் பலி 26 ஆக அதிகரிப்பு; 62 பேர் காயம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில், 16 ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 62 பேர் காயமடைந்தனர்.

பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து சனிக்கிழமை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. குவெட்டா ரயில் நிலையத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் காத்திருந்தனர். அப்போது பெஷாவர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலில் ராணுவ வீரர்கள் ஏற முயன்றனர். அவர்களை குறிவைத்து கூட்டத்தில் இருந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow