நேபாளத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைக்கால பிரதமராக சுசீலா பொறுப்பேற்பு

நேபாள நாட்​டில் ‘ஜென் ஸி’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி(73) தலை​மையி​லான கம்​யூனிஸ்ட் அரசு கவிழ்ந்​தது

Sep 13, 2025 - 07:55
 0  3
நேபாளத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைக்கால பிரதமராக சுசீலா பொறுப்பேற்பு

காத்மாண்டு: நேபாள நாட்​டில் ‘ஜென் ஸி’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி(73) தலை​மையி​லான கம்​யூனிஸ்ட் அரசு கவிழ்ந்​தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், நாட்​டின் இடைக்​கால பிரதம​ராக யாரை தேர்வு செய்​வது என்​பது தொடர்​பாக தொடர் ஆலோ​சனை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்​டெல், இது தொடர்​பாக ஆலோ​சனை​களை மேற்​கொண்டு வந்​தார்.

இதனிடையே, நேபாளத்​தின் இடைக்​கால பிரதம​ராக நேபாள உச்ச நீதி​மன்​றத்​தின் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவி​யேற்க, போராட்​டக்​காரர்​கள் ஒரு​மனதாக ஆதரவு தெரி​வித்​துள்​ளனர். நாட்​டின் இடைக்​கால பிரதம​ராக பதவி​யேற்க அவரும் சம்​மதம் தெரி​வித்​துள்​ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow