ராணுவச் சட்டம் அமல் எதிரொலி | தென்கொரிய அதிபர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல்-ஐ பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்களிக்கப்பட்டது. நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் அதிபரின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால் யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Dec 14, 2024 - 17:25
 0  4
ராணுவச் சட்டம் அமல் எதிரொலி | தென்கொரிய அதிபர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

சியோல்: தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல்-ஐ பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்களிக்கப்பட்டது. நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் அதிபரின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால் யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சியோலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக் வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அதிபர் யூனை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் யூன்பதவி நீக்கம் தொடர்பான தீர்மானத்துக்கு 204 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow