கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் மோதி தாக்குதல்: ஜெர்மனியில் காயமடைந்த 7 இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவி

ஜெர்​மனி​யில் மருத்​துவர் ஒருவர் கிறிஸ்​துமஸ் சந்தை​யில் காரை மோதி நடத்திய தாக்​குதலில் இந்தி​யர்கள் 7 பேர் படுகாயம் அடைந்​துள்ளனர். அவர்​களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.

Dec 23, 2024 - 03:15
 0  5
கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் மோதி தாக்குதல்: ஜெர்மனியில் காயமடைந்த 7 இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவி

புதுடெல்லி: ஜெர்​மனி​யில் மருத்​துவர் ஒருவர் கிறிஸ்​துமஸ் சந்தை​யில் காரை மோதி நடத்திய தாக்​குதலில் இந்தி​யர்கள் 7 பேர் படுகாயம் அடைந்​துள்ளனர். அவர்​களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.

ஜெர்​மனி​யின் மேக்​டேபர்க் நகரில் கிறிஸ்​துமஸ் பண்டிகைக்​காக, மிகப்​பெரிய ஷாப்​பிங் மார்க்​கெட்​டில் கடந்த வெள்​ளிக்​கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்​தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலை​யில் செல்​வோர் மீது மோதி​யபடி நிற்​காமல் சென்​றது. இதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்​தனர். 60-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். அவர்​களில் பலருடைய நிலைமை கவலைக்​கிடமாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow