‘அமெரிக்காவுடன் இணைந்தால் கோல்டன் டோம் பாதுகாப்பு இலவசம்’ - கனடாவுக்கு ட்ரம்ப் சலுகை! 

கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

May 28, 2025 - 15:40
 0  3
‘அமெரிக்காவுடன் இணைந்தால் கோல்டன் டோம் பாதுகாப்பு இலவசம்’ - கனடாவுக்கு ட்ரம்ப் சலுகை! 

வாஷிங்டன்: கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரூத் சமூக ஊடக தளத்தில் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் அற்புதமான கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் ஓர் அங்கமாக விரும்பும் கனடாவிடம், ஒரு தனித்த சுதந்திர தேசமாக சேர விரும்பினால் 61 பில்லியன் டாலர் அதற்காக செலவாகும். ஆனால், அவர்கள் எங்களின் நேசத்துக்குரிய 51-வது மாநிலமாக மாறினால் ஒரு டாலர் கூட செலவாகாது என்று நான் தெரிவித்தேன். அவர்கள் சலுகையை பரிசீலனை செய்து வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow