நிலநடுக்க காரணம் முதல் தற்காப்பு வரை: மியான்மர் பூகம்பத்தை முன்வைத்து நிபுணர்கள் சொல்வது என்ன?
வெள்ளிக்கிழமை முற்பகல் மியான்மரின் மாண்டலேவுக்கு அருகே உருவான 7.7 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த பூகம்பம் 800 கிலோ மீட்டர் தாண்டி, அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் வரை உலுக்கியது.

நைப்பியிதோ: மியான்மரின் மாண்டலேவுக்கு அருகே வெள்ளிக்கிழமை முற்பகல் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 800 கிலோ மீட்டர் தாண்டி, அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் வரை உலுக்கியது.
மியான்மரை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு பூகம்பத்தால் மியான்மரின் இரண்டு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் நைப்பியிதோவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்புக் குழுவின் வெளியில் எடுப்பதை எங்கும் காண முடிகிறது. அதேநேரத்தில் வானுயர்ந்த கட்டிடம் உட்பட கட்டுமான பணிகள் நடந்து வந்த மூன்று கட்டிடங்கள் இடிந்து விழுந்த இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பாங்காக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?