நியூஸிலாந்து பேட்டிங்கில் இருந்து பாடம் கற்குமா இங்கிலாந்து?
பாஸ்பால் மாயையில் உழன்று கொண்டிருக்கும் இங்கிலாந்து ஆஷஸ் ஒன்றையே கொக்கிற்கு ஒன்றே மதி என்று மனதில் கொண்டு மற்ற தொடர்களை ஏனோதானோவென்று ஆடி தொடர் தோல்விகளைச் சந்திப்பதை ஒரு பெருந்தன்மையாகக் கொண்டுள்ளது

பாஸ்பால் மாயையில் உழன்று கொண்டிருக்கும் இங்கிலாந்து ஆஷஸ் ஒன்றையே, கொக்கிற்கு ஒன்றே மதி என்று மனதில் கொண்டு மற்ற தொடர்களை ஏனோதானோவென்று ஆடி தொடர் தோல்விகளைச் சந்திப்பதை ஒரு பெருந்தன்மையாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக 2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் சொதப்பியது, அதன் பிறகு மே.இ.தீவுகளில் இரண்டு தொடர்களை இழந்தது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழந்தது. இப்போது இங்கிலாந்தின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் மெக்கல்லம் எடுத்துக் கொண்ட பிறகும் அணுகுமுறையில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை.
What's Your Reaction?