உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் சதம்: ஆஸ்திரேலிய அணி 330 ரன் குவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினர்.

Jan 30, 2025 - 08:05
 0  4
உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் சதம்: ஆஸ்திரேலிய அணி 330 ரன் குவிப்பு

காலே: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினர்.

இலங்கையின் காலே நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார்கள். 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் பிரபாத் ஜெயசூர்யா பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 14.3 ஓவர்களில் 92 ரன்கள் குவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow