நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 3 டன் மலர்களால் சிறப்பு அபிஷேகம்

ஆங்கிலப் புத்​தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 3 டன் பூக்​களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்​கணக்கான பக்தர்கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

Jan 2, 2025 - 11:10
 0  3
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 3 டன் மலர்களால் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல்: ஆங்கிலப் புத்​தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 3 டன் பூக்​களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்​கணக்கான பக்தர்கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயி​லில் நேற்று அதிகாலை 3.30 மணிக்​குக் கோயில் நடை திறக்​கப்​பட்டு, சுவாமிக்கு வடை மாலை சாத்​துபடி செய்​யப்​பட்டு, தீபாராதனை நடைபெற்​றது.

தொடர்ந்து, நல்லெண்​ணெய், சீயக்​காய், திரு​மஞ்​சனம், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்​தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்​களால் சிறப்பு அபிஷேக​மும், நிறைவாக கனகாபிஷேகமும் நடந்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow