தருமபுரம் ஆதீனகர்த்தர் இன்று சிவிகை பல்​லக்​கில் பட்டினப் பிரவேசம்

தருமபுரம் ஆதீனகர்த்தர் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று ஆதீன குருமூர்த்தங்களில் நேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இன்று (மே 19) சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொள்கிறார்.

May 19, 2025 - 05:20
 0  5
தருமபுரம் ஆதீனகர்த்தர் இன்று சிவிகை பல்​லக்​கில் பட்டினப் பிரவேசம்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனகர்த்தர் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று ஆதீன குருமூர்த்தங்களில் நேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இன்று (மே 19) சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொள்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா, ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழா மே 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கடந்த 15-ம் தேதியும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow