நாட்டிலேயே முதல் முறையாக 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர்: டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம்

மல்​டி​பாய்ன்ட் ப்ரொஜெக்​டர் ஹெட்​லேம்ப்​கள், ஸ்போர்ட்டி டெயில் லேம்ப்​கள், ஏரோடைனமிக் விங்​லெட்​கள், சிக்​னேச்​சர் சவுண்ட் கொண்ட ஒரு ஸ்டப்பி மப்​ளர், நேக்டு  ஹேண்​டில்​பார் மற்​றும் வண்ண அலாய் சக்​கரங்​கள் என பல்​வேறு சிறப்பு அம்​சங்​கள் இதில் உள்​ளன. 

Sep 12, 2025 - 08:10
 0  3
நாட்டிலேயே முதல் முறையாக 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர்: டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம்

சென்னை: ​நாட்​டிலேயே முதல் முறை​யாக 150சிசி ஹைப்​பர் ஸ்போர்ட் ஸ்கூட்​டரை டிவிஎஸ் மோட்​டார் நிறு​வனம் அறி​முகம் செய்துள்​ளது. இரண்டு மற்​றும் மூன்று சக்கர வாக​னப் பிரி​வில் உலக அளவில் முன்​னணி​யில் உள்ள டிவிஎஸ் மோட்​டார் நிறு​வனம், தனது என்​டார்க் பிராண்​டின் கீழ் மிக வேக​மான ஹைப்​பர் ஸ்போர்ட் ஸ்கூட்​டரை சென்​னை​யில் நேற்று அறி​முகம் செய்​தது. 150 சிசி இன்​ஜின் திறன் கொண்ட நாட்​டின் முதல் ஸ்கூட்​டர் என்ற பெருமை இதற்கு கிடைத்​துள்​ளது.

புதிய தலை​முறையைச் சேர்ந்த இருசக்கர வாகன பிரியர்​களை திருப்​திபடுத்​தும் வகை​யில், அபார​மான செயல்​திறன், கம்​பீர​மான ஸ்போர்ட்டி தோற்​றம் மற்​றும் அதநவீன தொழில்​நுட்​பத்​துடன் இந்த ஸ்கூட்​டர் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. 6.3 வினாடிகளில் 0-விலிருந்து 60 கி.மீ. வேகத்தை எட்​டும் திறன் கொண்​டது. அதி​கபட்​ச​மாக மணிக்கு 104 கி.மீ. வேகத்​தில் செல்​லும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow