நவீன தொழில்நுட்பத்தில் வருகிறது பான் 2.0 கார்டு

நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்​வதற்கு மட்டும்​தான் என்ற நிலை மாறி​விட்​டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்​கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்​தமான பரிவர்த்​தனை​களுக்​கும், தங்கம், நிலம் வாங்​கு​வதற்​கும் பான் கார்டு கட்டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது

Dec 10, 2024 - 12:05
 0  4
நவீன தொழில்நுட்பத்தில் வருகிறது பான் 2.0 கார்டு

நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்​வதற்கு மட்டும்​தான் என்ற நிலை மாறி​விட்​டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்​கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்​தமான பரிவர்த்​தனை​களுக்​கும், தங்கம், நிலம் வாங்​கு​வதற்​கும் பான் கார்டு கட்டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதனால்​தான் வருமான வரிதா​ரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்த​போ​தி​லும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்​கி​யுள்​ளனர்.

இந்நிலை​யில், பான் 2.0 திட்​டத்தை செயல்​படுத்த மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. பயனர்​களின் பயன்​பாட்டை மேம்​படுத்து​வதற்​கும் தொழில்​நுட்ப முன்னேற்​றங்​களுடன் இணைப்​ப​தற்​கும் வரிவசூல் தொடர் கண்காணிப்பு அமைப்​புக்​கும் இது உதவும். இதற்காக ரூ.1,300 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow