நயன்தாரா - விக்னேஷ் சிவனால் சந்தித்த ‘சோதனைகள்’ - தனுஷ் வட்டாரம் சொல்வது என்ன?

தனுஷுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், நயன்தாராவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தனுஷுக்கு நெருக்கமான தரப்பிடம் நடந்த விஷயங்களை விசாரித்தபோது அவர்கள் வெளியிட்ட தகவல்கள்:

Nov 18, 2024 - 09:40
 0  3
நயன்தாரா - விக்னேஷ் சிவனால் சந்தித்த ‘சோதனைகள்’ - தனுஷ் வட்டாரம் சொல்வது என்ன?

சில தினங்களுக்கு முன்பு தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டார். இது இணையத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. தனுஷுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், நயன்தாராவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தனுஷுக்கு நெருக்கமான தரப்பிடம் நடந்த விஷயங்களை விசாரித்தபோது அவர்கள் வெளியிட்ட தகவல்கள்:

“அன்று ‘நானும் ரவுடிதான்’ சமயத்தில் நடந்த மோதலே முதல் காரணம். ‘நானும் ரவுடிதான்’ படத்தை 6 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கினார் தனுஷ். ஆனால், அப்படம் முடிவடையும்போது படத்தின் பட்ஜெட் 18 கோடி ரூபாய். வேறொரு தயாரிப்பாளராக இருந்தால் அந்த சமயத்தில் அப்படத்தையே கைவிட்டிருப்பார்கள். ஏனென்றால், அந்தச் சமயத்தில் அப்படியொரு முதலீட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து யாருமே ரிஸ்க் எடுத்திருக்க மாட்டார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow