நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.

Nov 11, 2024 - 16:14
 0  5
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பணியை துறந்தார். நாடகங்களிலும் நடித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow