நயன்தாரா ஆவணப்பட ட்ரெய்லர் எப்படி? - ‘லேடி சூப்பர் ஸ்டார்’ முதல் திருமணம் வரை!

நயன்தாராவின் திருமணம் மற்றும் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Nov 11, 2024 - 16:14
 0  4
நயன்தாரா ஆவணப்பட ட்ரெய்லர் எப்படி? - ‘லேடி சூப்பர் ஸ்டார்’ முதல் திருமணம் வரை!

சென்னை: நயன்தாராவின் திருமணம் மற்றும் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற முழக்கங்களுடன் நயன்தாரா நடித்த படத்தின் மாஸான காட்சிகளுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். கன்னட நடிகர் உபேந்திரா, இயக்குநர் அட்லீ, நடிகை டாப்ஸி, நடிகர் ராணா, ராதிகா, இயக்குநர் நெல்சன் ஆகியோர் அடுத்தடுத்து நயன்தாரா குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றனர். நாக சைதன்யா, நயன்தாராவின் ரிலேஷன்ஷிப் குறித்து பேசுகையில், அதுவரை இருந்த ட்ரெய்லரின் உற்சாகம் மாறி, தன்னை பற்றி விமர்சனங்கள், நம்பிய மனிதர்கள் குறித்து நயன்தாரா பகிர்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow