நந்தினி ரெட்டி இயக்கும் படத்தை தயாரித்து நடிக்கிறார் சமந்தா
நடிகை சமந்தா கடைசியாக ‘குஷி’ படத்தில் நடித்திருந்தார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்குச் சிகிச்சை பெற்று வந்ததால் படங்களில் நடிக்க வில்லை.

நடிகை சமந்தா கடைசியாக ‘குஷி’ படத்தில் நடித்திருந்தார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்குச் சிகிச்சை பெற்று வந்ததால் படங்களில் நடிக்க வில்லை. இந்நிலையில் அவர் தனது தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் மூலம் ‘சுபம்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில் அவர் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இப்போது ‘த பேமிலிமேன்’ இயக்குநர்களின் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் தளத்துக்காக வெப் தொடர் ஒன்றில் நடித்து வரும் சமந்தா, அடுத்து நந்தினி ரெட்டி இயக்கும் படத்தைத் தயாரித்து, நடிக்க இருக்கிறார். இவர், சமந்தா நடித்த ‘ஜபர்தஸ்த்’, ‘ஓ பேபி’ ஆகிய படங்களை ஏற்கெனவே இயக்கியுள்ளார்.
What's Your Reaction?