தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலை ஜூலை 31-ல் திறப்பு: முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து முதல் கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.

Jul 24, 2025 - 19:10
 0  4

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இதற்காக தூத்துக்குடி அருகே சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மின்சார கார் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024 பிப்ரவரி 25-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow