துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.23 - 29
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன. 23 - 29

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன்- பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 28.01.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாற்றம் பெற்று மறைந்தாலும் உச்சம் பெறுவதால் எடுத்த காரியங்களில் இருந்த தடைதாமதம் நீங்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
What's Your Reaction?