திரை விமர்சனம்: திரு.மாணிக்கம்
தமிழக - கேரள எல்லையான குமுளியில் லாட்டரி சீட்டுக் கடை நடத்துகிறார் மாணிக்கம் (சமுத்திரக்கனி).

தமிழக - கேரள எல்லையான குமுளியில் லாட்டரி சீட்டுக் கடை நடத்துகிறார் மாணிக்கம் (சமுத்திரக்கனி). அவரிடம் லாட்டரி சீட்டு வாங்குகிறார் ஊர், பெயர் தெரியாத முதியவர் (பாரதிராஜா). பணத்தைத் தொலைத்துவிட்ட அவர், பணத்தைக் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக்கொள்வதாகச் சொல்லிச் செல்கிறார். அவரது பயணச் செலவுக்கும் மாணிக்கமே பணம் கொடுத்து அனுப்ப, அடுத்த நாள், பெரியவர் பணம் கொடுக்காத லாட்டரி சீட்டுக்கு ரூ.1.5 கோடி பரிசு விழுகிறது. இப்போது மாணிக்கம் எடுக்கும் முடிவும் அதை செயல்படுத்த அவர் படும் பாடுகளுமே கதை.
கடந்த ஜூலையில் வெளியான ‘பம்பர்’ படத்தின் அதே ஒரு வரிக்கதை. ஆனால், திரைக்கதை, உரையாடல், படமாக்கம் ஆகிய அம்சங்களில் உற்சாகமான திரைமொழியைக் கையாண்டு, பல இடங்களில் பதற்றப்படவும் பல இடங்களில் நெகிழவும் வைத்துவிடுகிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. மாணிக்கம் தனது லாட்டரி சீட்டுக் கடையில் தமிழ் நூல்களையும் விற்பனை செய்வது, அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிவிடுகிறது திரைக்கதை.
What's Your Reaction?