திரை விமர்சனம்: அலங்கு

கேரளத்தை ஒட்டியிருக்கும் மலைக் கிராமத்தில் அம்மா, தங்கையுடன் வசிக்கும் தருமன் (குணாநிதி), அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்க ரப்பர் தோட்டத்துக்கு நண்பர்களுடன் வேலைக்குச் செல்கிறார்.

Dec 29, 2024 - 05:05
 0  5
திரை விமர்சனம்: அலங்கு

கேரளத்தை ஒட்டியிருக்கும் மலைக் கிராமத்தில் அம்மா, தங்கையுடன் வசிக்கும் தருமன் (குணாநிதி), அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்க ரப்பர் தோட்டத்துக்கு நண்பர்களுடன் வேலைக்குச் செல்கிறார். கூடவே தனது செல்ல நாயான காளியையும் அழைத்துச் செல்கிறார். ரப்பர் தோட்ட முதலாளியின் (செம்பன் வினோத்) மகளைத் தெருநாய் ஒன்று கடித்துவிட, ஆத்திரத்தில் அவர், அந்த ஊரில் திரியும் நாய்களை எல்லாம் கொன்று குவிக்க, தன் ஆட்களை ஏவுகிறார். நாய்களை வேட்டையாடும் கூட்டத்திடம் காளி சிக்கிக்கொள்ள, அதை மீட்கும் போராட்டத்தில் தருமனும் அவன் நண்பர்களும் என்னவானார்கள் என்பது கதை.

சொந்தக் காரணத்துக்காக நாய்களைக் கொல்பவனுக்கும், நாயை நேசிப்பவனுக்குமான போராட்டமாக விரிகிறது திரைக்கதை. முதல் பாதியில் காடு - மலையை வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கை, அதில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் ஆகியவற்றை இயல்பாகச் சித்தரிக்கிறது படம். வாழைத் தோட்டத்தை நாடி வரும் யானையை ஆபத்தான முறையில் விரட்ட முயலும் அணுகுமுறையின் விளைவை அழுத்தமான காட்சியாகப் பதிவு செய்கிறது படம். அதேபோல், நாய்கள் மீதான மனித அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களைத் திரைக்கதையின் ‘மைய முரண்’ வழியாக அழுத்தமாகவும் கோருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow