திருவானைக்காவல் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பிரம்மோற்சவம் என்ற பங்குனித் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது.

Mar 8, 2025 - 14:15
 0  5
திருவானைக்காவல் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி: பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பிரம்மோற்சவம் என்ற பங்குனித் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது.

அதன்படி, திருவானைக்காவல் கோயிலில் பங்குனிப் பெருவிழா இன்று காலை, பெரிய கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இன்று மாலை முதல் 13-ம் தேதி காலை வரை விநாயகர், சுப்ரமணியர் உற்சவம் நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி மாலை முதல் 16-ம் தேதி காலை தேவார மூவர் உற்சவம் (நால்வர் புறப்பாடு) நடைபெறுகிறது. 16-ம் தேதி மாலை முதல் 19-ம் தேதி காலை வரை கல்யாண சுந்தரமூர்த்தி உற்சவம் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow