திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

Mar 19, 2025 - 22:05
 0  3
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 7-ம் தேதி முதல் நாள் திருவிழா நடந்தது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. அதனையொட்டி 11-ம் நாள் (மார்ச் 17) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் 12-ம் நாள் (மார்ச் 18) திருக்கல்யாணம் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow