திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 17 முதல் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை சேவை
மார்கழி மாதம் பிறப்பதை முன்னிட்டு வரும் 17-ம் தேதி அதிகாலை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவைக்கு பதில் ஒருமாதம் வரை ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.

மார்கழி மாதம் பிறப்பதை முன்னிட்டு வரும் 17-ம் தேதி அதிகாலை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவைக்கு பதில் ஒருமாதம் வரை ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத சேவை நிகழ்ச்சியுடன் சுவாமிக்கு சேவைகள் தொடங்கும். ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடி, ஏழுமலையானை துயில் எழுப்புவது ஐதீகம். இந்த திருப்பாவை சேவை இந்த ஆண்டு வரும் மார்கழி மாதம் 17-ம்தேதி அதிகாலை முதல் தொடங்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?