திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலம்: காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Aug 17, 2025 - 01:25
 0  3
திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலம்: காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர்: அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

​திரு​வள்​ளூர் மாவட்​டம் திருத்​தணி​யில் உள்ள சுப்​பிரமணிய சுவாமி கோயில், முரு​க​னின் அறு​படை வீடு​களில் ஒன்​றாக விளங்​கு​கிறது. இக்​கோயி​லில், ஆண்​டு​தோறும் ஆடிக் கிருத்​திகை திரு​விழா சிறப்​பாக நடை​பெறும். இந்த ஆண்டு ஆடிக் கிருத்​திகை திரு​விழா, கடந்த 14-ம் தேதி ஆடி அஸ்​வினி விழாவோடு தொடங்​கியது. முக்​கிய நிகழ்ச்​சி​யான ஆடிக் கிருத்​திகை திரு​விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. அதி​காலை 4 மணி அளவில் மூல​வருக்கு சிறப்பு அபிஷே கம் மற்​றும் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. தங்​கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்​கல் மற்​றும் வைர ஆபரணங்​கள் அணி​வித்​து, சிறப்பு தீபா​ராதனை நடை​பெற்​றது. அதே​போல், காவடி மண்​டபத்​தில் சிறப்பு அலங்​காரத்​தில் காட்​சி​யளித்த உற்​சவருக்கு தீபா​ராதனை நடை​பெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow