திருச்சி சோழாஸ் அணியை வீழ்த்தியது சேலம் @ டிஎன்பிஎல்

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

Jun 12, 2025 - 01:50
 0  4
திருச்சி சோழாஸ் அணியை வீழ்த்தியது சேலம் @ டிஎன்பிஎல்

கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்களும், சன்னி சாந்து 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்களும் விளாசினர். திருச்சி அணி தரப்பில் அதிசராஜ் டேவிட்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow