சவுதியை வீழ்த்தி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

Jun 12, 2025 - 01:50
 0  4
சவுதியை வீழ்த்தி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி

ஜெட்டா: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது கட்ட ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ‘சி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 42-வது நிமிடத்தில் கானர் மெட்கால்ஃபும், 48-வது நிமிடத்தில் மிட்ச் டியூக்கும் கோல் அடித்து அசத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow