திருச்சானூரில் பஞ்சமி தீர்த்தவாரி கோலாகலம்: திரளான பக்தர்கள் புனித நீராடல்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத் தின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்ம குளத்தில் புனித நீராடினர்.

Dec 7, 2024 - 05:45
 0  4
திருச்சானூரில் பஞ்சமி தீர்த்தவாரி கோலாகலம்: திரளான பக்தர்கள் புனித நீராடல்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத் தின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்ம குளத்தில் புனித நீராடினர்.

புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் கார்த்திகை பிரம்மோற்சவ விழா, கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் தாயார் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் அனைத்தும் வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, அன்னதானம், தரிசன வசதிகளை தேவஸ்தானம் சிறப்பாக செய்திருந்தது. வாகன சேவை களில் வெளி மாநில நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow