திரிபுர சுந்தரி அம்பாள் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்து ள்ள திரிபுர சுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக் கல்யாண பெருவிழா வின் ஏழாம் நாளான இன்று திருத்தேரின் அம்பாள் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Jul 25, 2025 - 19:30
 0  3
திரிபுர சுந்தரி அம்பாள் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா வின் ஏழாம் நாளான இன்று திருத்தேரின் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயில் கோயில் வளாகத்தில், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, ஆடிப்பூரம் உற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow