திமிங்கிலங்களின் பாடல்கள் | உயிரினங்களின் மொழி - 9

ஆர்கா திமிங்கிலங்கள் இடம்சார்ந்த விழிப்புணர்வைக் கொண்டுள்ளன. தங்கள் இருப்பிடத்தையும், மற்ற திமிங்கிலங்களின் இருப்பிடத்தையும் துல்லியமாகக் கண்டறியும் திறன்கொண்டுள்ளன. திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு அதிர்வெண்களில் ஒலிகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல செய்திகளை அவற்றால்  அனுப்ப முடியும்.

Mar 7, 2025 - 19:40
 0  3
திமிங்கிலங்களின் பாடல்கள் | உயிரினங்களின் மொழி - 9

பூமியில் உள்ள மிகப்பெரிய பாலூட்டி திமிங்கிலம். 1970-களில், கலிபோர்னியா கடல் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் ரோஜர் பெய்ன் முதன்முதலில் திமிங்கிலங்களின் பாடல்களைத் துல்லியமாகப் பதிவுசெய்து ஆராய்ந்தார். இந்த ஒலிகள் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையையும் தொடர்ச்சியையும் ரிதத்தையும் கொண்டுள்ளன என்று நிரூபித்தார். அதன் பிறகு, கோர்னல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கேத் சால்ஸ் இந்த ஒலிகளை ஆழமாக ஆராய்ந்து, திமிங்கிலங்களின் ஒலியில் வடிவங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்தாலும் அவை ஒன்றோடு மற்றொன்று தகவல் பரிமாறிக்கொள்ளும் திறன்கொண்டவை. அவை உருவாக்கும் பாடல்களும் விசில்களும் வெறும் ஒலிகள் மட்டுமல்ல.

கூன் முதுகுத் திமிங்கிலங்களின் மொழி ஒரு பாடலைப் போன்றது. கிட்டத்தட்ட 20 முதல் 30 நிமிடங்கள் வரை அது நீளும். நூறு கிலோமீட்டருக்கும் அதிகத் தொலைவில் உள்ள மற்ற கூன் முதுகுத் திமிங்கிலங்களுக்கும் இந்தப் பாடல்கள் கேட்கும். அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு தாளமும் ஏற்ற இறக்கமும் ஒரு தகவலைக் கொண்டிருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow