தவிர்க்க முடியாத மருத்துவப் படிப்பு | புதியன விரும்பு 2.0 - 17
பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே இப்படிப்புக்கு தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப் படுகிறார்கள். ஆண் செவிலியர்கள் இருந்தாலும்கூடப் பெண்களே அதிக அளவில் செவிலியர்களாகப் பணிபுரிகிறார்கள்.

நோயாளிகளின் நோய் குறித்த விவரக்குறிப்புகளைப் பராமரிப்பது, பிரசவம் பார்ப்பதில் உதவி, குழந்தைகளை மருத்துவமனையில் இருக்கும்வரை பார்த்துக் கொள்வது என மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவதிலிருந்து அறுவைசிகிச்சை அரங்கில் மருத்துவர்களுக்கு உதவியாக இருப்பதுவரை நர்ஸ்கள் என்கிற செவிலியர்களுக்குப் பலதரப்பட்ட பணிகள் உள்ளன.
பிஎஸ்சி நர்சிங் படிப்பு: மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காதவர்களுக்கான மற்றொரு வாய்ப்புதான் நர்சிங் என்று கருத வேண்டியது இல்லை. இரண்டு படிப்புகளும் மருத்துவத் துறை சார்ந்தவை என்றாலும்கூட, இரண்டுக்கும் தனித்தனித் திறமைகளும் குணநலன்களும் தேவை.
What's Your Reaction?