தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்​டில் ரூ.63,339 கோடி வரி வசூல்

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.63,339 கோடி வரி வசூலாகி​யுள்​ள​தாக, ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணை​யர் ஏ.ஆர்​.எஸ்​.கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

Jul 2, 2025 - 11:50
 0  4
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்​டில் ரூ.63,339 கோடி வரி வசூல்

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.63,339 கோடி வரி வசூலாகி​யுள்​ள​தாக, ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணை​யர் ஏ.ஆர்​.எஸ்​.கு​மார் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா​வில் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி​முதல் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டது.

ஜிஎஸ்டி அறி​முகப்​படுத்​தப்​பட்டு 8 ஆண்​டு​கள் நிறைவடைந்​ததை அடுத்து தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி மத்​திய சரக்கு மற்​றும் சேவை வரி மண்​டலம் சார்​பில் சரக்கு மற்​றும் சேவை வரி தினம் சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று கொண்​டாடப்​பட்​டது. தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரிக்​கான முதன்மை தலைமை ஆணை​யர் ஏ.ஆர்​.எஸ்​.கு​மார் தலைமை தாங்​கி​னார். முன்னாள் முதன்மை ஆணை​யர் ராம் நிவாஸ் முன்​னிலை வகித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow