தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்: ‘ஆரூரா... தியாகேசா...’ முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்
சித்திரைப் பெருவிழாவையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஆரூரா... தியாகேசா...’ என்று முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தஞ்சாவூர்: சித்திரைப் பெருவிழாவையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஆரூரா... தியாகேசா...’ என்று முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த ஏப். 23-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைப் பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, தேரில் தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா.. என முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
What's Your Reaction?