தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: 5 நாட்களில் ரூ.2,680 குறைந்தது!
தங்கம் விலை இன்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை ஆகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை ஆகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720, ஏப்ரல் 7-ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்தது. இந்த வரிசையில் இன்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?