தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆகவும் விற்பனை ஆகிறது.

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆகவும் விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது, நேற்று காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, நேற்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, 8,855-க்கு விற்பனையானது.
What's Your Reaction?