தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Nov 13, 2024 - 04:25
 0  5
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் 25-ம் தேதி பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கும் விற்பனையானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow