டெல்லி கணேஷ்: தன்னைத் தானே வெற்றிகொண்டவர்! | அஞ்சலி
மாஸ் படங்களில் முதன்மை நடிகர்களாகத் தொழிற்படும் ஹீரோ, ஹீரோயின்கள் மட்டும்தான் ரசிகர் களுக்கு நெருக்கமானவர்கள் என்கிற ஒரு மாயை இருந்தது. அதைத் தகர்த்த பன்முக கலைஞர்களில் டெல்லி கணேஷ் முன்னோடி.

நண்பனோ, எதிரியோ, முகமறிந்த உறவுகளோ, முன்பின் அறிந்திராத முகங்களோ, விதவிதமான மனிதர் களோடு வாழ்வதும் கால ஓட்டத்தில் பலரை மறந்து நகர்வதும்தான் வாழ்க்கை. இப்படி நம் ரத்த உறவுகளையும் மறந்துபோன சக மனிதர்களையும் தன் உடல்மொழியால், பேச்சு மொழியால் உயிரூட்டி, நமக்கு நினைவூட்டும் ஆற்றல் கொண்ட பெரும் கலைஞர் டெல்லி கணேஷ். அகத்தின் உணர்வுகளைக் கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் கண்களை, (அவை அவருக்கு மிகச் சிறியதாக அமைந்தபோதும்) தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த முக்கியக் கருவியாகப் பயன்படுத்தி யவர்.
அவர் சிரித்தால், கண்களோடு மொத்த முகத்திலும் அவரது அகத்தின் அழகு பரவி நிற்கும். திரையில் அவர் மூட்டும் சிரிப்பின் மின்னூட்டம் நமக்குச் சட்டெனப் பரவும். அவர் அழுதால் நம் கண்களும் உடையும். கோபப்பட்டால் நம்மைப் பதற்றம் தொற்றும். கதாபாத்திர நடிப்பில், ஒவ்வொரு உணர்வையும் பார்வை யாளரை நொடியில் உணர வைப்பதில் ஆற்றல் குறையாதவர் மட்டுமல்ல; எந்தவொரு கதாபாத்திரத்தின் உடல் மொழியையும் யாரும் பிரதியெடுக்க முடியாத தனித்துவ நுணுக்கத்துடன் வெளிப்படுத்தி விடுவார்.
What's Your Reaction?