“அஜித்துடன் இணைகிறார் சிவா; ‘கங்குவா’ பட இரைச்சல் சரி செய்யப்படும்” - ஞானவேல் ராஜா 

“இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்ததாக அஜித்துடன் இணைகிறார். ‘கங்குவா’ படத்தின் இரைச்சலை சரி செய்ய திரையரங்கைச் சேர்ந்தவர்களிடம் பேசியிருக்கிறேன். வால்யூம் குறைக்கப்படும்” என ‘கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 

Nov 15, 2024 - 16:20
 0  6
“அஜித்துடன் இணைகிறார் சிவா; ‘கங்குவா’ பட இரைச்சல் சரி செய்யப்படும்” - ஞானவேல் ராஜா 

சென்னை: “இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்ததாக அஜித்துடன் இணைகிறார். ‘கங்குவா’ படத்தின் இரைச்சலை சரி செய்ய திரையரங்கைச் சேர்ந்தவர்களிடம் பேசியிருக்கிறேன். வால்யூம் குறைக்கப்படும்” என ‘கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெலுங்கு ஊடகத்தினரிடம் கூறுகையில், “அடுத்து இயக்குநர் சிவா அஜித்தை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும். அதன் பிறகு ‘கங்குவா’ 2-ம் பாகத்துக்கான பணிகள் தொடங்கும். ‘கங்குவா 2’ மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது” என்றார். மேலும் ‘கங்குவா’வில் இரைச்சல் அதிகமாக இருப்பது குறித்து அவர் பேசுகையில், “சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow