‘ஜென்டில்வுமன்’ பெண்ணிய படமா?

‘ஜெய்பீம்’ லிஜோமோள் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம், ‘ஜென்டில்வுமன்’.

Jan 30, 2025 - 10:15
 0  3
‘ஜென்டில்வுமன்’ பெண்ணிய படமா?

‘ஜெய்பீம்’ லிஜோமோள் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம், ‘ஜென்டில்வுமன்’. கோமலா ஹரி பிக்சர்ஸ் சார்பில் ஹரி பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கியுள்ளார். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.

படம் பற்றி ஜோசுவா சேதுராமன் கூறும்போது, “ஜென்டில் என்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல, அது பெண்களுக்குமானது தான். பொதுவாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. அது ஏன் அப்படி இருக்கிறது என்றால் இந்தச் சமூகம் பெண்ணுடலை ஒரு பண்டமாகவும் பொருளாகவும் பார்ப்பதுதான். அதுபற்றிய விவாதம் இந்தப் படத்தில் இருக்கும். பெண்கள் பற்றி பொதுவாக இருக்கிற கற்பிதங்களைக் கேள்விக் கேட்பதாகவும் இருக்கும். இரண்டு பெண்களைப் பற்றிய கதைதான் படம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow