ஜூபின் கார்க்: அசாமின் உயிர்!
அசாம் முழுவதும் சோகத்தில் மூழ்கியிருந்ததைத் தொலைவிலிருந்தும்கூட உணர முடிந்தது. கலைக்கு அப்பால் பாடகர், பாடலாசிரியர், இசை யமைப்பாளர், நடிகர் எனப் பன்முகமாக இயங்கியவர், ஜூபின் கார்க்.

செப்டம்பர் 19. அசாம் பாடகர் ஜூபின் கார்க்கின் மறைவுச் செய்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன. ரசிகர்களின் கண்ணீர் படங்களும், காணொளிகளும் அதிகம் தென்பட்டன. அசாம் முழுவதும் சோகத்தில் மூழ்கியிருந்ததைத் தொலைவிலிருந்தும்கூட உணர முடிந்தது. கலைக்கு அப்பால் பாடகர், பாடலாசிரியர், இசை யமைப்பாளர், நடிகர் எனப் பன்முகமாக இயங்கியவர், ஜூபின் கார்க்.
இந்தி, அசாமி, வங்காளம் மட்டுமல்லாமல் தமிழ், மலையாள மொழிகளிலும் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். 38,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ள அவர், சிங்கப்பூர் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 52 வயதான ஜூபினின் இறுதி ஊர்வலத்துக்கு அசாமில் திரண்ட மக்கள், அவரின் பாடல்களைப் பாடி வழியனுப்பி வைத்தது சமூக ஊடகங்களில் வைரலானது.
What's Your Reaction?