ஜிஎஸ்டி வரியில் 12, 28% வரம்பை நீக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை

கடந்த சுதந்​திர தினத்​தில் டெல்லி செங்​கோட்​டை​யில் இருந்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்பு நீக்​கப்​பட்டு வரி முறை எளி​தாக்​கப்​படும் என கூறி​னார்.

Aug 22, 2025 - 09:55
 0  19
ஜிஎஸ்டி வரியில் 12, 28% வரம்பை நீக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை

புதுடெல்லி: கடந்த சுதந்​திர தினத்​தில் டெல்லி செங்​கோட்​டை​யில் இருந்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்பு நீக்​கப்​பட்டு வரி முறை எளி​தாக்​கப்​படும் என கூறி​னார். இந்​நிலை​யில் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க மாநில நிதி​யமைச்​சர்​கள் சென்​றுள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்​சர்​கள் குழு உறுப்​பினர்​களாக​வும் உள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்​பு​களை நீக்​கு​வதற்கு பரிந்துரை செய்​தனர்.

இது ஜிஎஸ்டி கவுன்​சிலின் இறுதி பரிசீலனைக்கு செல்​கிறது. இந்த பரிந்​துரைக்கு ஜிஎஸ்டி கவுன்​சில் ஒப்​புதல் வழங்​கி​னால், ஜிஎஸ்டிவரி முறை​யில் 5% மற்​றும் 18% மட்​டுமே இருக்​கும். மற்​றவை நீக்​கப்​படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow