ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை அளிக்கும் பக்தர்

திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு விரை​வில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளி​யிட விரும்​பாத ஒரு பக்​தர் காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்​படு​கிறது.

Aug 22, 2025 - 09:45
 0  3
ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை அளிக்கும் பக்தர்

திரு​மலை: திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு விரை​வில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளி​யிட விரும்​பாத ஒரு பக்​தர் காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறியதாவது: ஏழு​மலை​யானின் தீவிர பக்​தர்​களில் ஒரு​வர் ஒரு நிறு​வனத்தை தொடங்​கி​னார். அதில் அவர் அதிக லாபத்தை ஈட்​டி​னார். 60 சதவீத விற்​பனை​யிலேயே அவருக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைத்​தது. இதனால் அந்த பக்​தர், இதெல்​லாம் திருப்​பதி ஏழு​மலை​யானின் கருணை என்​பதை உணர்ந்​து, ஏழு​மலை​யானுக்கு 121 கிலோ எடை​யில் தங்க ஆபரணங்​களை வழங்க முடிவு செய்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow