சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதலிடம்: தலைமை செயல் அதிகாரி ​ தகவல் 

இந்​தி​யா​வின் சொகுசு கார் விற்​பனை​யில் மெர்​சிடிஸ் பென்ஸ் முதலிடத்​தில் உள்​ள​தாக அந்​நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி சந்​தோஷ் ஐயர் கூறி​னார்.

Nov 16, 2025 - 01:30
 0  3
சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதலிடம்: தலைமை செயல் அதிகாரி ​ தகவல் 

புனே: இந்​தி​யா​வின் சொகுசு கார் விற்​பனை​யில் மெர்​சிடிஸ் பென்ஸ் முதலிடத்​தில் உள்​ள​தாக அந்​நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி சந்​தோஷ் ஐயர் கூறி​னார்.

மெர்​சிடிஸ் பென்ஸ் நிறு​வனம் சார்​பில் புனே நகரில் 100 ஏக்​கரில் நிறு​வப்​பட்​டுள்ள கார் உற்​பத்தி ஆலை​யில் அனைத்து ரக பெட்​ரோல், டீசல்
கார்​களு​டன், மின்​சார கார்​களும் தயாரிக்​கப்​படு​கின்​றன. இங்கு பணிபுரி​யும் 800 பேரில் சுமார் 30 சதவீதம் பேர் பெண்​கள். இந்​நிலை​யில், மெர்​சிடிஸ் பென்ஸ் இந்​தியா நிறுவன தலைமை செயல் அதி​காரி சந்​தோஷ் ஐயர் செய்​திாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் ஆண்​டு​தோறும் சராசரி​யாக 50,000 சொகுசு கார்​கள் விற்​பனை​யாகும் நிலை​யில், அதில் 20 ஆயிரம் கார்​கள் பென்ஸ் கார்​களாகும். எங்​கள் நிறு​வனம் செயல்​திறன், தொழில்​நுட்​பம் மற்​றும் பாது​காப்​பில் மிகுந்த கவனம் செலுத்​துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow