சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.76 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிந்து 78,675 ஆகவும், நிஃப்டி 256 புள்ளிகள் சரிந்து 23,883 ஆகவும் குறைந்தன.

Nov 13, 2024 - 02:05
 0  5
சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.76 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிந்து 78,675 ஆகவும், நிஃப்டி 256 புள்ளிகள் சரிந்து 23,883 ஆகவும் குறைந்தன. சதவீத அளவில் சென்செக்ஸ் 1.03%, நிஃப்டி 1.07% சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

பிரிட்டானியா 7.49%, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 3.20%, என்டிபிசி 3.12%, ஹெச்டிஎஃப்சி வங்கி 2.72%, ஏசியன் பெயிண்ட்ஸ் 2.68%, எஸ்பிஐ 2.47%, டாடா மோட்டார்ஸ் 2.47%, பஜாஜ் ஆட்டோ 2.43%, ஸ்ரீராம் பைனான்ஸ் 2.28%, மாருதி சுசூகி 2.25%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 2.22% என்ற அளவில் சரிவைக் கண்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow