சூர்யாவின் ‘கங்குவா’ இரண்டு நாட்களில் ரூ.89.32 கோடி வசூல்!

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.89.32 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Nov 16, 2024 - 23:15
 0  4
சூர்யாவின் ‘கங்குவா’ இரண்டு நாட்களில் ரூ.89.32 கோடி வசூல்!

சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.89.32 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow