சுசுகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி மறைவு

சுசுகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவரும், அந்நிறுவனத்தின் உலகளாவிய உந்து சக்தியுமான  ஒசாமு சுசுகி காலமானார். அவருக்கு வயது 94. லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டிசம்பர் 25ம் தேதி உயிரிழந்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Dec 27, 2024 - 15:20
 0  4
சுசுகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி மறைவு

டோக்கியோ: சுசுகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவரும், அந்நிறுவனத்தின் உலகளாவிய உந்து சக்தியுமான ஒசாமு சுசுகி காலமானார். அவருக்கு வயது 94. லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டிசம்பர் 25ம் தேதி உயிரிழந்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1930-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ஜப்பானின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு மட்சுடா, சுசுகி நிறுவனத்தை உருவாக்கியவர்களின் குடும்பத்துடன் திருமணம் செய்தபின்பு, 1958-ம் ஆண்டு ஆட்டோமேக்கராக அதில் இணைந்தார். பின்பு தனது மனைவியின் குடும்ப பெயரை எடுத்துக்கொண்ட ஒசாமு, அதன்பின்பு சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுசுகி ஒரு குடும்ப பெயராக மாறும் வியத்தகு மாற்றத்துக்கான தனது பயணத்தைத் தொடங்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow