சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக இன்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Jan 13, 2025 - 13:50
 0  3
சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக இன்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத பவுர்ணமி அன்று திருவாதிரை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்தித்துடன் கூடிய பவுர்ணமி நாளில் உபவாசம் இருந்து, சிவபெருமானை வழிபடும் நாள். திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து நாட்களில் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow