சிவன்மலை முருகன் கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து வழிபாடு!

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில்,  இன்று (மார்ச் 6) கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது. 

Mar 6, 2025 - 18:30
 0  3
சிவன்மலை முருகன் கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து வழிபாடு!

காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று (மார்ச் 6) கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது.

காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற கோயில்களில் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற அம்சம் உள்ளது. அதாவது, சிவன்மலை முருகன் ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்னா பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, பக்தர்கள் தரும் சிறப்பு பூஜைப் பொருளை வழிபட்டு, பின்னர் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில் வைப்பது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow