ஞாயிறு தரிசனம்: திருமணத் தடை போக்கும் கரூர் பாலமலை முருகன்

சோழ பேரரசன் முசுகுந்த சக்கரவர்த்தி கருவூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் ஒருகோமாதா புல்லை மேயும் போது அருவுருவாகிய பிம்பத்தில் பால் சொரிந்தது.

Mar 23, 2025 - 09:30
 0  3
ஞாயிறு தரிசனம்: திருமணத் தடை போக்கும் கரூர் பாலமலை முருகன்

மூலவர் / உற்சவர் : பாலசுப்ரமணிய சுவாமி. அம்பாள் : வள்ளி, தெய்வயானை. தல வரலாறு: சோழ பேரரசன் முசுகுந்த சக்கரவர்த்தி கருவூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் ஒருகோமாதா புல்லை மேயும் போது அருவுருவாகிய பிம்பத்தில் பால் சொரிந்தது. அதை மாடு மேய்க்கும் சிறுவன், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தெரிவித்தான். அன்றே அச்சிறுவன் முருகப் பெருமான் ரூபத்தில் முசுகுந்த சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். முருகப் பெருமானின் தரிசனத்தால் பேரானந்தம் அடைந்த அரசன் ஸ்ரீ பால முருகனுக்காக இத்தலத்தை அமைத்தார் என்பது புராண வரலாறு.

ஸ்கந்த புராண காலத்தில் தேவேந்திரன் அசுரர்களுக்கு பயந்து அக்ஞாத வாசம் செய்தபோது தன் நித்ய ஆத்மார்த்த பூஜைகளுக்கு வேண்டி இந்த ஊரில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்தார். புஷ்பவனம் அமைத்தபோது, ஈசன் மழையை வரவழைத்து அருள்பாலித்தார். அதனால் இங்குள்ள ஈஸ்வரன் தேவேந்திரேஸ்வரர் என்றும், அம்மன் தேனாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow