சிரிப்புக்குள் ஒளிந்திருக்கும் வலி! | இயக்குநரின் குரல்
மூன்றாவது தயாரிப்பாக உருவாகியிருக்கிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்க, அவர்களுடன் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல் சேர்ந்துகொள்ள, அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி, இயக்கியிருக்கிறார்.

மணிகண்டன் நடிப்பில் ‘குட்நைட்’, ‘லவ்வர்’ ஆகிய தரமான படங்களைக் கொடுத்த நிறுவனம் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ். அதன் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியிருக்கிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்க, அவர்களுடன் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல் சேர்ந்துகொள்ள, அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி, இயக்கியிருக்கிறார். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படத்தின் டீசர், டிரைலர் தொடங்கி ‘இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் கதை’ என்பதைச் சொல்கிறது. சசிகுமாரின் குடும்பம் எந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வருகிறது? - கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னர், 2022இல் இலங்கை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. கட்டுப்படுத்த முடியாத பணவீக்கத்தால் பொருள்களை வாங்க முடியாதபடி விலைவாசி 500 மடங்கு வரை உயர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில்தான் யாழ்ப்பாணத்திலிருந்து சசிகுமாரின் குடும்பம் தமிழ்நாட்டுக்கு வருகிறது.
What's Your Reaction?