சித்திரைத் திருவிழா: தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் - மலர்தூவி வரவேற்ற பக்தர்கள்! 

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று (மே 10) மாலை மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.

May 10, 2025 - 20:40
 0  4
சித்திரைத் திருவிழா: தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் - மலர்தூவி வரவேற்ற பக்தர்கள்! 

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று (மே 10) மாலை மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலர்கள் தூவி வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் நாளை (மே 11) அதிகாலை எதிர்சேவை நடைபெறும்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான இன்று (மே 10) காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள் எழுந்தருளினார். பின்னர் மாலையில் சுந்தரராஜபெருமாள், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் கோயிலிலிருந்து மாலை 5.20 மணியளவில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow